பிரான்ஸ் கொந்தளிக்கிறது!

எங்கு நோக்கிலும் மக்கள் தலைகள்!!
மக்களை அடக்க 11 ஆயிரம் அதிகாரிகள்!!
பிரான்ஸ் முழுவதும் எழுந்துள்ள மக்கள் எழுச்சியை அடக்க காவல்துறையைத் தயார்படுத்துமாறு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆணையிட்டார்.

அதனடிப்படையில் 11 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பிரான்ஸ் நாட்டுத் தெருக்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தலைநகர் பாரிஸ் வீதிகளில் ஆயுதபாணிகளாக உலாவி வருகின்றனர். மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.