புலம்பெயரும் தொழிலாளர்களைக் கணக்கெடுத்தால் என்ன?

ராமேஸ்வரத்துக்கும் வடஇந்தியர்களுக்குமான தொடர்பு நாட்பட்டது. அது ஆன்மிகத்தால் வந்தது. வடஇந்தியர்கள் ராமேஸ்வரம் வருவது ராமநாதரை வழிபடுவதற்காக. ஆனால், சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இரண்டு வடஇந்தியத் தொழிலாளர்களைக் குறித்து வெளியான செய்திக்கும் ஆன்மிகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தொழிலாளர்கள் ஒரு ராமேஸ்வர மீனவப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தி, அவரை எரித்துக் கொன்றும் விட்டார்கள்.