வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில்-11: அதிவலதின் நவீன போக்குகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இருபத்தியோராம் நூற்றாண்டின் தீவிர வலதுசாரி இயக்கங்களின் சூழல், உள்ளடக்கம் ஆகிய இரண்டும், அவற்றின் மூதாதையர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவை. பாரம்பரிய பாசிசம் போன்ற முன்னோடி இயக்கங்களுடனான சின்னங்களின் எந்தவொரு தொடர்ச்சியும் அற்றனவாக, பெரும்பான்மையான அதிவலது அமைப்புகள் இயங்குகின்றன.