இறுதியில் சொதப்புவது எப்படி?

(டி.கார்த்திக்)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடரை இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக வென்று எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2013ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதோடு சரி. அதன்பிறகு நடத்தப்பட்ட ஐசிசி தொடர்களில் இந்திய அணி அரையிறுதி, இறுதிப் போட்டி வரை முன்னேறியும் கோப்பையை வெல்லாமல் திரும்பும் சோகம் தொடர்கிறது. நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா சொதப்ப என்ன காரணம்?