‘உலக முடிவு’ மலையின் அடிவாரத்தில் துரத்தும் பூதம்

(க. மஹிந்த குமார்)

பலாங்கொடை, நன்பெரியல் பிரம்டண் தோட்ட பிரிவானது பலாங்கொடை நகரில் இருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. அங்கு சுமார் 45 தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த சுமார் 500 பேர் வாழ்ந்து வருகின்றனர். ‘உலக முடிவு’ என்று அழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் தோட்டத்துக்கு, தேர்தல் காலங்களில் மாத்திரமே அரசியல்வாதிகள் செல்வார்கள். மற்றைய நாள்களில் அங்கு ஒரு தோட்டம் இருக்கின்றது என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதில்லை; அந்தத் தோட்டம் தொடர்பாக எவரும் தேடியும் பார்ப்பதில்லை.