கச்சத் தீவு விவகாரத்தில் நடந்தது என்ன? – இந்தியாவால் மீட்க முடியுமா?

முரளிதரன் காசி விஸ்வநாதன்
பிபிசி தமிழ்

இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் நெடுந்தீவிற்கும் இடையில் அமைந்துள்ள மிகச் சிறிய தீவான கச்சத் தீவை மீட்க வேண்டுமென அடிக்கடி குரல்கள் எழுகின்றன. அந்தத் தீவை இந்தியா தாரைவார்த்துக் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. உண்மையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?