காதலும் நட்பும் உருவாக்கிய கார்ல் மாக்ஸ் இன் மூலதனம்

அதிலும் சிறப்பாக நிலத்தை அடிப்படையாக கொண்ட வாழ்வியலில் இது என்னுடைய நிலம் என்றாக எல்லை வகுக்காது வாழ்ந்தார்கள் மனிதர்கள் அன்று. கூடவே அப்படித்தான் உணர்ந்தார்கள்.

மனித உயிரினம் உருவாவதற்கு முன்பே இவை இருந்தன. நிலம் இருந்தது தற்போது நாம் விருந்தாளிகளாக இங்கு வந்துள்ளோம் என்ற உணர்வே அவர்களிடம் அன்று இருந்தன

மனிதர்களாகிய நாம் எமக்கான காலத்தில் இதில் வாழ்ந்துவிட்டு மரித்துவிடுவோம். இடுத்த தலைமுறையினரிடம் இதனைப் பக்குவமாக விட்டுச் செல்வோம் என்று நம்பினார்கள்.

இதனைத்தான் ‘ஆறடி நிலமே போதுமடா…’ என்ற மரித்தலுக்கு பின்னராக நிலமையை நாம் கூறி நிற்கின்றோம்.

அதனால் அது ஆதிப் பொதுவுடமைச் சமூகமாக பார்க்கப்பட்டது.
இதனை கார்ல் மாக்ஸ்தான் அழகாக தெளிவாக வரையறுத்து அதிலிருந்து ஆரம்பித்து ஐந்து வகையான சமூக அமைப்புகள் மனித குல வாழ்வில் இருக்கும்.

அதன் இறுதி வடிவம் ஆரம்ப வடிவமான பொது உடமையாக ஆனால் வளர்ச்சியடைந்து பொதுவுடமை சமூகமாக இருக்கும் என்றார்.

இதை அடிப்படையிலேயே மனித குல வரலாற்றை எழுதினார். அது சமூக விஞ்ஞானம் ஆகிற்று.

ஆனால் இதற்கான மாற்றம் ஒரு இரு தினங்களில் நாட்களில் வருடங்களில் ஏற்பட்டுவிடாது அதற்கான படி முறையில் நடைபெறும். இதற்கான போராட்டங்களால் மட்டும் இதனை வேகப்படுத்தியதாக நடை முறைக்கு கொண்டு வரமுடியும் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

சமூக மாற்றம் எற்பட்டதற்கான.. ஏற்படுவதற்கான பொருளாதார கட்டமைப்பு மாற்றத்தை விளங்கப்படுத்துவதற்காக…. எவ்வாறு இந்த சமூக மாற்றம் ஏற்படும் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிறுவுவதற்காக ‘மூலதனம்’ என்னும் நூலை ஆய்வுகள் அடிப்படையிலான தரவுகளில் இருந்து எழுதி முடித்தார்

கார்ல் மாக்ஸ் இன் ஜென்னியுடனான காதலும் அவரின் உறுதுணையும் இல்லை என்றால் இந்த மூலதனம் இல்லை..

இதற்கு அவர் இழந்தவையை அவர் அதிகம் எப்போதும் பேசியது இல்லை. அது தனது பிள்ளைகளின் வறுமை மரணமாக இருக்கட்டும் இதற்கு அப்பால் உள்ள விடயங்களாகவும் இருக்கட்டும்.

ஆனால் அந்த காதலை அன்பை அரவணைப்பை உறுதுணையை அவர் எப்போதும் பேசியே வந்திருக்கின்றார்.

அது தள்ளி இருந்த போது தவறிய போது அவர் இடிந்து போனார் அதற்காக ஏங்கினார் என்பதிலேயே அவரின் காதல் உயர்ந்து நின்றது

அதுதான் எம்மைப் போன்ற பலரையும் காதலின் மகிமையை பேசும் அளவிற்கு உணரும் அளவிற்கும் உயர்த்தியும் இருக்கின்றது.

மாறாக லைலா, மன்ஜு; அம்பிகாவதி, அமராவதி; முஜ்தாஜ், சாஜகான் காதல் கதைகள் அல்ல

அதே போல் பிறடிக் ஏங்கல்ஸ் என்ற நட்பும் இல்லை
என்றால் இந்த மூலதனம் என்ற அரிய நூல் அச்சேறி இருக்குமா தொகுக்கப்பட்டிருக்குமா…?

இல்லை என்பதை விட கடினமாக இருந்திருக்கும் ஆவணமாகாமல் அழிக்கப்பட்டிருக்கலாம் சில வேளைகளில்.

ஆனால் சோவியத்தின் சிற்பி லெனின் போன்றவர்களின் தொடர்ச்சிதான் இதனை உலகிற்கு அதிகம் அறிமுகப்படுத்தியும் இருக்கின்றது.
இந்த வகையில் சோவியத்தும் லெனினும் இவரின் தொடர்ச்சியான பலரும் அது பத்மநாபா வரை நாம் நினைவில் கொள்ளப்பட வேண்டியவர்கள்

பால்ய பதின்ம வயது தொடங்கி பல்கலைக் கழகம் என்றாக ஏன் இன்று மூப்படைந்த வயதிலும் பல நட்புகள் எமக்கும் ஏங்கல்ஸ் போல் உறவாக நட்பாக உசாத்துணையாக இருக்கின்றன என்பதை நாம் உணர்வோம்.
இதனை அண்மைய தாயகத்து தமிழ் நாட்டுப் பயணங்கள் எனக்கு மீண்டும் உணர்த்தி நின்றன.

மரபணு உறவுகளை விட இந்த காதலும், நட்பும் அதிக இடங்களில் உயர்ந்து நின்றதை உணர்ந்தேன்

தற்போதைய நவீன காலத்திலும் கார்ல் மாக்ஸ் ஐ பெயர் சொல்லாவிட்டாலும்…? அவரின் கோட்பாடு என்று முன்னேறிய முதலாளித்துவம் கதைக்காவிட்டாலும் இன்று உலகில் அதிகம் வாசிக்கப்படுவதும் எடுத்து நோக்கப்படுவதும் புத்தகமாக கார்ல் மாக்ஸ் இன் மூலதனம் புத்தகம் அமைகின்றது.

முற்றிய நிலையில் இருக்கும் முதலாளித்துவம் போர்களை வேறு யாரைக் கொண்டு செய்து கொண்டு அட்டணைக் கால் போட்டு ஆயுத விற்பனை மூலம் பீட்சாவும் பேகரும் ஸ்ரேக்கும் புரியாணியும் சாப்பிட்டு உல்லாசம் காண முடியும் அவல நிலையில் நாம் நின்றாலும்….

இந்த மணலினால் கட்டும் அடுக்கு மாடிகள் கற்பனை உலகங்கள் ஒருகாலத்தில் தானாகவே உலர்ந்து உதிரும். உதிர வைக்கப்படும்

இதற்கான காலத்தை எவ்வாறு வேகப்படுத்தலாம் என்பதற்கு நாம் கார்ல் மாக்ஸ் இன் மூலதனம் ஐ வாசிப்போம் லெனின் அரசு பற்றிய தெளிவாக்கலைப் புரிந்து கொள்வோம்.

மனித குலத்தை முழுவதுமாக நேசித்து அனைத்து நாடுகளையும் தேசங்களையும் தனது தேசங்களாக உணர்ந்த கார்ல் மாக்ஸ் இன் நினைவு தினம்.

காதலுடன் வாழ்ந்து நட்பால் தாங்கிப் பிடிக்கப்பட்டு அனைத்து மனிதர்களையும் நேசித்த மனிதனாக நாம் கார்ல் மாக்ஸ் ஐ நாம் பார்க்க முடிகின்றது