சோஷலிச நாடாக இருந்த சோவியத் ரஷ்யாவில் ‘மதம்’ எப்படி இருந்தது?

(Rathan Chandrasekar)

மனித நம்பிக்கைகளுக்கு எதிராக சோவியத் அரசியல் சட்டம் எந்தக் குற்றமும் இழைக்க அனுமதிக்கவில்லை. மக்கள் நாத்திகராகவோ கடவுள் நம்பிக்கை உள்ளவராகவோ இருக்க உரிமை அளிக்கப்பட்டிருந்தது.
சோவியத் அரசு வழிபாட்டு சுதந்தரத்தை பிரகடனம் செய்து அதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அதற்கு குந்தகம் ஏற்படுத்தினால் சட்டப்படி தண்டனை உண்டு.