பெண்கள் கொள்ளி வைக்கலாமா? அபரக்கிரியை செய்யலாமா? பிதிர்க்கடன் ஆற்றலாமா?

(இ. லம்போதரன் MD)

பெண்களுக்கு தம்முடைய தந்தை அல்லது தாயார் இறந்தபின் அவர்களுக்கு எமது சைவ சமய மரபுப்படி எரியூட்டவோ, செய்யவேண்டிய இறுதிக்கிரியைகள் செய்யவோ உரிமை இல்லை என்ற கருத்து பல காலமாக எம் மக்களிடையே வேரூன்றி இருக்கின்றது. இதை எமது சமயகுருமாரும் கூறி வருகின்றார்கள்.