மம்மூட்டி

(Rathan Chandrasekar)

இப்போது அல்ல. 87, 88 இருக்கும்.
தூர்தர்ஷனில் மம்மூட்டியை நேர்காணுகிறார்கள்.
சினிமா எனக்குத் தொழில். என்னை ரசிக்கலாம். ஆராதிக்கக்கூடாது என்கிற மாதிரியே சென்றுகொண்டிருந்த அந்தப் செவ்வியில் – அவரை “கேரளத்தின் சூப்பர் ஸ்டாரான நீங்கள்….” என்றபடி, எதுவோ கேட்க முற்படுகிறார் நேர்காணுகிறவர்.
மம்மூட்டி சொல்கிறார் :
“நான் கேரள சினிமாவின் சூப்பர் ஸ்டார் அல்ல. மோகன்லால்தான் அங்கே சூப்பர் ஸ்டார்!”