மினிஆப்போலஸ்யை புரிந்துகொள்ளும் நாம், நிச்சாமத்தை புரிந்துகொள்ளத் தயாரில்லை!

(Thesam Net)
ஜனநாயகத்தின் காவலன், மனித உரிமைகளின் காவலன் என்ற வேசம் கலைக்கப்பட்டு நிர்வாணமாக நிற்கின்றது, அமெரிக்கா என்ற முன்னாள் வல்லரசு. அதேபோன்று தமிழ் சூழலில் இந்த நிறவாதத்திறகுச் சற்றிலும் குறையாத சாதிவாதம் பிரதேச வாதம் மதவாதம் இன்றும் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. ஒடுக்கும் சாதியினரான கணிசமான பிரிவினர் முழுப் பூசணிக்காயை சோற்றினுள் மறைக்க முயன்றாலும் இவையெல்லாம் ஆங்காங்கே தலைக்காட்டியே வருகின்றது. பிரித்தானியாவில் உள்ள இனவாதம் போன்று வடக்கில் உள்ள சாதிவாதம் பிரதேசவாதம் மதவாதம் அனைத்தும் அங்குள்ள கட்டமைப்புகளினால் உள்வாங்கப்பட்டு அதுவே நடைமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகிவிட்டது.