லாட்டரிச் சீட்டு போதை.

(Rathan Chandrasekar)

இருபது வருஷம் இருக்கும் ?
நான் பணிபுரிந்த அந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியர்
ஒருநாள் கண்ணீர் சுரந்தார்.
“அண்ணா, என்னாச்சு?” என்று பதறினேன்.
“நான் மீண்டுவிட்டேன் ரதன்.
அடிமையிலிருந்து மீண்டுவிட்டேன்….”
குடிபோதை மாதிரி அவருக்கிருந்தது
லாட்டரிச் சீட்டு போதை.