வடிவேலுவுக்கு நன்றி சொல்வோம்………….. !

வடிவேலுவின் பிறந்தநாள் அன்று அவருக்கு வாழ்த்துகளும், நன்றிகளும் சமூகவலைத்தலங்களில் குவியும். ஆனால் அன்று மட்டுமல்ல; இன்றும் (10/10/2020) அவருக்கு நன்றியும், வாழ்த்தும் சொல்லி நாம் மகிழ்வோம் என்கிறார் மனநல மருத்துவர் ராமானுஜம்.அதற்காக அவர் சொல்லும் காரணங்கள்…………. 10/10 என்பது மன நலத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான எண். அக்டோபர் மாதம் 10-ம் தேதி உலக மன நல நாள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் மன நலம் தொடர்பான விழிப்புணர்வை உலக சுகாதார நிறுவனம் பரவலாக எடுத்துரைத்து வருகிறது.