பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக…. வா வா வா… ஒளி படைத்த கண்ணினாய்…… வா வா வா…

(சாகரன்)

விவாதிப்பதும்…. கலந்துரையாடுவதும்…. பேச்சுக்களை நடாத்துவதும் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதற்கு அவசியமானவைதான். இங்கு பிறக்கும் ‘கலகங்கள்’ தெளிவுகளை ஏற்படுத்தி அந்த சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு வாய்ப்புகளை எற்படுத்தும்.