கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும் – அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 04

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

நீருயிரின வளர்ப்பு:

நீருயிரின வளர்ப்பிற்கு, உயிரியல், பொருளாதார, சட்டரீதியான பல வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. மூலப்பொருள், சக்தி, தொழிலாளர்கள் போன்ற உள்ளீடுகளை இட்டு, வளர்க்கப்படும் தாவர, விலங்குகளின் இறப்பு வீதம், பிறப்பு வீதம், இனப்பெருக்கம் போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி வளர்க்கும் முறை என வரைவிலக்கணப்படுத்தலாம். நீரில் தாவரங்களையும், விலங்குகளையும் வளர்க்கும் அறிவியல் எனவும் இலகுவாக இனனொருமுறையில் வரைவிலக்கணப்படுத்தலாம்.