நீர்கொழும்பு மீள்சுழற்சி சமூகம் நிறுவப்பட்டது

Negombo Recycling Club (NRC) என்ற பெயரில் ஒரு விரிவான பொருள் மீட்பு வசதி (Material Recovery Facility – MRF) 2023 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச மீள்சுழற்சி தினத்துடன் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவின் பங்கேற்புடன் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. MRF ஆனது, Coca-Cola இன் பரோபகாரப் பிரிவான The Coca-Cola Foundation (TCCF) மற்றும் இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்டது.