அகதிகளை திருப்பியனுப்புவதை முடிவுக்கு கொண்டு வரவுள்ள ஐ. அமெரிக்கா

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், குவாத்தமாலா, எல் சல்வடோர், ஹொண்டூரஸுடனான ஒப்பந்தங்களை, ஐ. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகமானது இடைநிறுத்துவதாக அறிக்கையொன்றில் ஐ. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கின் நேற்று தெரிவித்துள்ளார்.

ஐ. அமெரிக்கா, குவாத்தமாலாவுக்கிடையேயான ஒப்பந்தத்தின் கீழ் நூற்றுக்கணக்கானோர் திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கொவிட்-19 பரவல் காரணமாக இது கடந்தாண்டு மார்ச் மாதம் நடுப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், எல் சல்வடோர், ஹொண்டூரஸுடனான ஒப்பந்தங்கள் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.