அகதி தஞ்சம் கோரிச் சென்ற இலங்கையர்கள்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சட்ட விரோதமாக  தமிழகத்திற்கு  செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண், 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.