”அமெரிக்கப் போர்க் கப்பலை ஒரே அடியில் மூழ்கடிப்போம்!” வட கொரியா சூளுரை!

”அமெரிக்க அணு சக்தி விமானம் தாங்கிக் கப்பலை ஒரே அடியில் மூழ்கடித்து அழிப்பதற்கு எங்களின் புரட்சிப் படைகள் தயாராகவே உள்ளன. பெரிய விலங்கு என்று எம்மாற் கூறப்படும் அதனை அழிப்பதன் மூலம் எங்கள் இராணுவத்தின் சக்தியை அமெரிக்காவுக்கு எடுத்துரைப்போம்!” என்று வடகொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் பத்திரிகையான நோடாங் ஷின்முன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது செய்தியிற் கூறியிருக்கிறது.

இதே போன்றதொரு எச்சரிக்கையை மாநில செய்தித்தாளான மிஞ்சு ஜோசன் பத்திரிகையும் பிரசுரித்துள்ளது. அத்தோடு, “எதிரிகள் மீண்டும் எழும்ப முடியாத அளவு எமது இராணுவம் இரக்கமற்ற அடியைக் கொடுக்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க, அமெரிக்காவின் பெரிய போர்க் கப்பலான கார்ல் வின்சன் இவ்வாரத்தில் கொரிய தீபகற்பத்தைச் சென்றடையுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(எஸ். ஹமீத்)