அரசியலுக்கு விடைகொடுக்க தயாராகும் ரணில்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.