அரசியல் நிர்ணய சபை எனும் UNP நாடகமும் TNA யினரது சோரம் போன அணுகுமுறையும்:

தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை நல்லாட்சி அரசினர் நிறைவேற்றுவார்கள் என்கின்ற உறுதி மொழியோடு மக்களிடம் வந்து பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் 16 ஆசங்களை தமதாக்கி பாராளுமன்றத்தில் நல்லாட்சியினரின் அனுசரணையுடன் எதிர்கட்சி தலைமை உட்பட பல பதவிகளை பெற்றுக்கொண்டனர். குறிப்பாக சுமந்திரன் இலாகா இல்லாத முக்கிய மந்திரி போன்றே செயற்பட்டு வந்தார். ஸ்ரீ லங்கா அரசின் மீதிருந்த மேற்கு நாடுகளின் அழுத்தத்தை நீர்த்து போக செய்ததில் சுமந்திரனின் பங்கு மிகவும் பிரதானமானது. சுமந்திரன் பிரதமரின் விசேட பிரதானியாகவே இந்த விடயத்தில் செயற்பட்டார். இவர் கடந்த நாலரை வருடங்களாக அலரி மாளிகையின் செல்வாக்கு மிக்க செல்லப்பிள்ளை.