அவசரமாக திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த மூன்று விமானங்கள், சீரற்ற வானிலையை அடுத்து மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதன்படி, மெல்போன், மாலே மற்றும் தமாம் ஆகிய நகரங்களிலிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்களே இவ்வாறு மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.