ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ஒரே வாரத்தில் ஏற்படும் 2வது நிலநடுக்கம் இதுவாகும். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.