ஆறுகளை இணைக்கும் திட்டம் நிறைவேறியது

களுகங்கையையும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தையும் இணைத்து மலைகளுக்கு அடியில் இரண்டு பக்கங்களிலும் இருந்து தோண்டப்பட்ட இலங்கையின் மிக நீண்ட சுரங்கம் நடுவழியில் சந்தித்துள்ளது. மொத்தம் 7.9 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கம் இலங்கையில் நீர்ப்பாசன வரலாற்றில் ஒரு அத்தியாயமாகும். மொத்தமாக 28 கிலோமீட்டர் சுரங்கப் பாதைகள் இந்த திட்டத்தில் அமைக்கப்படவுள்ளதோடு இறுதியில் மஹாவலி நதியும் கனகராயன் ஆறும் இணைக்கப்பட்டு முழுமையான ஒரு வடக்கு தெற்கு நீர்வழியிணைப்பு ஏற்படுத்தப்படும். ஹீரடிய ஓயாவுக்கு மேலால் அமைக்கப்படவுள்ள 400 மீற்றர் நீளமான (Aqueduct )நீரிணைப்பாலம் மிகவும் அழகான காட்சியை இலங்கை மக்களின் கண்ணுக்கு விருந்தாக்கும்.