இந்தியாவில் பலத்த தேடுதல் நடவடிக்கைகள்

ஐ.எஸ் தீவிரவாத குழுவினரை தேடும் பலத்த பணிகளுக்கு மத்தியில் இந்தியா இறங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நேற்று பலத்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அங்கு வீடொன்றிலிருந்து அராபிய எழுத்துக்களில் எழுதப்பட்ட ஆவணங்கள் சிலவும், DVD ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்து சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களா என்று இதுவரை தெரியவில்லையென்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.