இந்தியாவுடன் 1 பில்லியன் டொலர் கடனுக்கு கைச்சாத்து

இந்தியாவுடன் இலங்கை, ஒரு பில்லியன் ​அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தம், புதுடெல்லியில் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டது என இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த நிதியமைச்சர் பசில் ​ராஜபக்ஷ, தனது விஜயத்தை முடித்துக்கொண்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சற்றுமுன்னர் நாடு திரும்பினார்.