இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வந்தார்

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இன்று உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்தடைந்தார். ஜூலை 20 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதுடில்லி விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை குவாத்ரா மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.