இரணைமடு நீர்மட்டம் அதிகரிப்பு

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால், 14 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், முரசுமோட்டை, ஐயன்கோயில், பன்னங்கண்டி, கண்டாவளை பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக செயற்படுமாறு இரணைமடு குளத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் சத்தியசீலன் செந்தில்குமரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.