இலங்கையிற்கு விசா வழங்கும் இந்திய தனியார் நிறுவனத்தால் குழப்பம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே.1 ஆம் திகதி முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், அன்றையதினம் (மே.1)  மாலை 05.00 மணி முதல் அவர்களால் கணினிகளை சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.