இலங்கை அகதிகள் தாயகம் திரும்புதல் அதிகரித்தால் கப்பல் பயணம் அவர்ககளுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து 25.10.16 காலை 9.30 மணிக்கு இலங்கை செல்லும் மிஹின்லங்கா விமானத்தில் 15 பெண்கள்,10 ஆண்கள் என 25பேர் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகத்தின் அனுசரனையுடன் தாயகம் திரும்பினர். இவர்களில் தாப்பாத்தி முகாமில் இருந்து 2 ஆண்கள், 2 பெண்கள் இவர்கள் 1990 இல் தமிகத்திற்கு சென்றவர்கள், வவுனியாவைச் சோந்தவர்கள்.திருமுர்த்தி நகர்,உருத்திரபுரம் முகாமில் இருந்து 6 பெண்கள்,4 ஆண்கள இவர்கள் கிறிநொச்சி முறிப்பு,உருத்திரபுரத்தைச்சேர்ந்தவர்கள். திருப்பூர் பெருமாள்புரம் முகாமைச்சேர்ந்த 2 பெண்,2 ஆண் இவர்கள் சம்பூர்,முதூரைச் சேர்ந்தவர்கள. இவர்கள் 1990 அகதிகளாக சென்றுள்ளனர்.வெம்பக்கோட்டை முகாமைச் சோந்த 1 பெண் இவர் மாத்தளைக்குச் செல்கிறார், 1990 இல் அகதியாக சென்றவர்.பெருமாள்புரம் முகாமில் இருந்து 1990 வந்த 3 பெண்கள்,1 ஆண் இவர்கள் கிளிநொச்சி செல்கிறார்கள்,மதுரை திருவாதவூர் முகாமில் இருந்த 1 பெண் , ,ஆண் 1 வட்டக்கச்சி கிளிநொச்சி செல்கிறார்கள் இவர்கள் 1990 இல் தமிகத்திற்கு அகதிகளாச் சென்றவர்கள்.

தாயகம் திரும்பியவர்களை ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் பணியாளர் மதுலை விமான நிலையம் சென்று பர்வையிட்டு அவர்களை பர்வையிட்டாhஇ அவர்களிடம் இலங்கை ஆவணங்கள் உள்ளனவா? தமிழகத்தில் பிறந்தவர்கள் இலங்கைப் பிறப்புசான்று எடுத்துள்ளார்களா?,இலங்கை குடியுருமைச்சான்று எடுத்துள்ளார்களா?.தமிகத்தில் கல்விகற்ற மாணவர்கள் தாயகம் திரும்பி கல்வியை தொடர அதற்குரிய சான்றுகளை எடுத்துச் செல்கிறார்களா? எனவும் கேட்டறிந்ததுடன் இலங்கையில் உள்ள ஈழ ஏதிலியர்; மறுவாழ்வுக் கழகத்தின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களையும் வழங்கினார்.

அகதிகள் தமிழகத்தில் முகாம்களிலும்,வெளியிலுமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழந்து வருகிறார்கள்.தமிழக முகாம்களில் உள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகளை தமிக அரசு செய்து கொடுத்துள்ளது.வெளியில் உள்ளவர்கள் தங்களது தேவைகளை அவர்களே கவனிக்கவேண்டும்.. இவர்களுக்கு அரசின் உதவிகள் கிடைப்பதில்லை.இருந்தும் தமிழக அரசின் மருத்துவகாப்பீட்டுத் திட்டம் வெளியில் உளள்வர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

முகாம்களில் உள்ள மக்கள் தாயகம் திரும்புதல் சொந்தச் செலவிலும் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் ஏற்பாட்டின் மூலமும் நடைபெறுகிறது. சொந்தச் செலவில் தாயகம் திரும்புகிறவர்களின் பயணஏற்பாட்டு நடைமுறைகள் அனைத்தும் அவர்களே மேற்கொள்ளவேண்டும். ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் மூலம் செல்பவர்களது பயணத்தேவைகளை உயர் ஸ்தானகமே கவனித்தக்கொள்ளும்.

சொந்தச் செலவில் செல்ல முயல்பவர்கள் தாங்கள் விரும்பிய காலத்துக்குள் தாயகம் திரும்பலாம். ஆனால் ஐக்கியநாடுகள் உயர் ஸ்தானகத்தின் மூலம் செல்ல விருப்பம் தெரிவிப்பவர்கள். நாடுதிரும்பல் முகாம்களில் விருப்பம் தெரிவிப்பவர்கள் எண்ணிக்கையை பொறுத்து பயணத்தேதி அமையும்.
அதிகளவிலான மக்கள் விருப்பம் தெரிவிக்கும் இடத்து தண்ணீர் கப்பலில் மக்களை அழைத்துச் செல்லும் நிலைமைகள் தோன்றலாம்.

கப்பலில் அகதிகள் நாடு திரும்புதல் என்பது.தாயகம் திரும்பும் அகதிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லமுடியும்.
முகாம்களில் இருந்தவர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பும் போது விமானப் பயணத்தில் வரையறுக்கப்பட்ட எடையையே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். நீண்ட பல வருடங்களாக வாழந்த அவர்கள் வரையறுக்கபட்ட எடையை விட அதிகளவான பொருட்களையே வைத்துள்ளனர். இதனால் அவர்கள் பலபொருட்களை விட்டுவிட்டு செல்லநேரிடுகிறது. கப்பல் பயணத்தில் இவர்களுக்கு இந்தத் தொந்தரவு இருக்காது. சரியான முறையில் அகதிகள் நாடுதிரும்புதல் கப்பல் மூலம் நடைபெற இலங்கை-இந்திய அரசுகள் சரியான ஏற்பாடுகள் செய்யும் பட்சத்தில மக்கள் முகாம்கில் பாவித்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் போன்றவற்றையும் கொண்டு செல்லக் கூடிய வழிவகைகள் ஏற்படலாம்.