இலங்கை – இந்தியாவுக்கு இடையில் இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

“இலங்கை இந்தியா இடையேயான தரைப் பாலத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை”

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் இன்று மாலை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டன. இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ், இலங்கைக்கு இன்று வெள்ளிக்கிழமை, விஜயம் செய்தார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மாநாட்டில் சுஷ்மா சுவ்ராஜ் மற்றும் இலங்கை வெளிவவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உட்டபட இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மாநாட்டின் முடிவில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல் மற்றும் வடமாகாணத்தில் 27 பாடசாலைகளை மீள்புனரமைப்பு செய்தல் ஆகிய இரண்டு ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டன.