இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டு வருகின்றது. இந்நிலையில் நாளொன்றுக்கு நடத்தப்படவேண்டிய பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 24 ஆயிரத்திலிருந்து 30,000 ஆக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், பி.சி.​ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள், பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவரும் வரை தனிமையில் இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.