இலங்கை: கொரனா நிலவரம்

கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(24) 458 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்படி தொற்றாளர்களில் 94 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொழும்பு மாவட்டத்தில் 100 க்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த தினங்களில் 100 க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.