இலண்டனில் அமிலம் விசிறப்பட்டுத் தாக்குதல்! 12 பேர் காயம்…600 பேர் வெளியேற்றம்!

(எஸ். ஹமீத்)

General view of the Mangle nightclub in Dalston, east London on Monday April 17, 2017. London police are investigating an acid attack at a London club that led to a mass evacuation with 12 people injured. Police said Monday April 17, 2017 that 12 people were treated at hospitals for burns. None of the injuries were said to be life-threatening. (Jack Hard/PA via AP)

கிழக்கு இலண்டனிலுள்ள ஒரு களியாட்ட விடுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் சக்தி வாய்ந்த அமிலம் விசிறப்பட்டதினால் சுமார் 12 பேர்வரை படுகாயங்களுக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

கிழக்கு இலண்டனிலுள்ள டால்ஸ்டான் என்னும் பகுதியிலிருக்கும் மங்கில் இரவு விடுதியில் (Mangle nightclub in Dalston, East London) இரு குழுக்களுக்கிடையே சர்ச்சை மூண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒரு குழுவினரால் மற்றைய குழுவினர் மீது தகரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காரமான அமிலத் திரவம் (HIGHLY CONCENTRATED ACID) விசிறியடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 12 பேர் வரை கடுமையான எரிகாயங்களுக்குள்ளாகியிருக்கின்றனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயினும் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

சம்பவத்தையடுத்து அப்பகுதியிலிருந்து 600 பேர் வரையானோர் தங்கள் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். காற்றில் அமிலம் கலந்து பிரச்சனைகளை ஏற்படுத்தலாமென்ற அச்சம் காரணமாகவே இவ்வாறு அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் குறிப்பிட்ட பகுதி தற்போது போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது.

இலண்டன் போலீசார் இதுபற்றித் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.