உணவுப்பொருட்களின் விலைகள் திடீரென அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாவினாலும், தேநீர் 5 ரூபாவினாலும், பால் தேநீர் 10 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.