உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் தேரர்

ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்கள், எழுத்துமூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, எம்.பி அத்துரலிய ரத்தன தேரர், அம்பியூலன்ஸ்ஸில், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆளுநர்களையும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனையும் பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி, இன்றுடன் நான்கு நாள்களாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை, தேரர் முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்தே, அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.