உதவி கோரிய உக்ரைன்; செவிசாய்த்த மோடி

 இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ரஷ்யா  உக்ரைன் மீது தொடுத்துள்ள போரைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக  இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி இவ்விடயத்தில் தலையிட்டு ரஷ்ய ஜனாதிபதி  புட்டினுடன் பேசி போரைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கும் விதமாக உக்ரைன்- ரஷ்யா போர் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் இருநாடுகளுடனும் போர் நிறுத்தம் குறித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.