எரிபொருள் குறித்து அறிவிப்பு

இலங்கை பெட்ரோலிய  கூட்டுத்தாபத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு வகையான எரிபொருள்கள் மொத்தமாக கிடைப்பதில்லை என்றும் இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் டீ.வீ சாந்த ​சில்வா தெரிவித்தார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளன. அதனால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.