“எல்லாம் நன்மைக்கே’’ மனதை திடப்படுத்திக்கொண்ட பவித்ரா

தான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,  எனினும் வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக்கொள்வதாகவும் தெரிவித்தார். இன்று (16) அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், சுகாதார  அமைச்சிலுள்ள அதிகாரிகளிடம் உரையாடிய போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.