ஐந்தில் நான்கு: பாஜகவின் வெற்றிப் பயணம்!

இரண்டு மாதங்களாக நடந்துவந்த தேர்தல் பரப்புரைகளின் பரபரப்பு ஓய்ந்து, ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அவற்றில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு சட்டமன்றங்களை அம்மாநிலங்களின் ஆளுங்கட்சியான பாஜக தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

இவற்றில், மணிப்பூரில் மட்டும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தது. எனினும், கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து பாஜக தனித்தே அங்கு களம்கண்டது. உத்தர பிரதேசத்தில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள பாஜக, பிரதானப் போட்டியாளராக இருந்த சமாஜ்வாதி கட்சியின் எதிர்பார்ப்பைத் தகர்த்திருக்கிறது.