ஐரோப்பியக் கிண்ண உதைப் பந்தாட்டப் போட்டிகள்….

சுவிற்ஸர்லாந்தை வீழ்த்திய இத்தாலி……

யூரோ கிண்ணத் தொடரில், இத்தாலியில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், சுவிற்ஸர்லாந்துக்கும் இடையிலான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. இத்தாலி சார்பாக, மனுவல் லொகடெல்லி இரண்டு கோல்களையும், சிரோ இம்மொபைலி ஒரு கோலையும் பெற்றனர். இந்நிலையில், இப்போட்டியில் வென்றதன் மூலம் விலகல் முறையிலான சுற்றுக்கு முதலாவது அணியாக இத்தாலி தகுதி பெற்றுள்ளது.