ஐவர் கொண்ட இளைஞர் குழுவை யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் முன்னாள்,தற்போதைய யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களாவர். யாழப்பாணம் நகரப்பகுதி புறநகரங்களில் அண்மைக்காலமாக கொள்ளையடித்தல்இவாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட ஐவர் கொண்ட இளைஞர் குழுவை யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்றைய தினம்(8) மாலை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து உள்ளுர் கைக்குண்டுகள்,வாள்,கத்தி,கைக்கோடாரி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இக்குழவினர் மீது யாழப்பாணம் ,சுன்னாகம்,கோப்பாய் ,மானிப்பாய் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் மேற்குறித்த குழுவினரை கைது செய்ய யாழப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த இரண்டு கிழமைகளாக கடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதன் போது இவ் ஐவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட இக்குழுவில் மானிப்பாய் லோட்டன் வீதியை சேர்ந்த தனு ரொக் என அழைக்கப்படும் (மோகன் தனுசன்-வயது 20), கல்வியன் காடு புலவர் வீதியை சேர்ந்த ரட்ணசிங்கம் செந்தூரன் (வயது-19) ,கோப்பாய் காளி கோவிலடியை சேர்ந்த கிசோக் என அழைக்கப்படும் பசுபதி கோபால்,உரும்பிராய் கிழக்கு பகுதியை சேர்ந்த சிவகுமார் நிசாந்தன்(வயது-23),கோப்பாய் தெற்கு பகுதியை சேரந்த சிறி ரஞ்சன் இராகுலன் (வயது-22) அடங்குகின்றனர்.

இவர்கள் அனைவரும் முன்னாள்,தற்போதைய யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களாவர்.

இக்குழுவினர் கடந்த மாதங்களில் கொள்ளை.மோட்டார் சைக்கிள் அபகரிப்பு,அத்துமீறி வீடுடைப்பு,சொத்துக்களிற்கு சேதம் விளைவித்தல்,வாளால் வெட்டி காயப்படுத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வருகின்றது.

அத்துடன் இக்குழுவிற்கு மானிப்பாய் தனு ரொக் என அழைக்கப்படும் நபரே தலைவராக செயற்பட்டு வந்தள்ளார்.

இவர்கள் யாழப்பாணம் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதயில் இதுவரை இடம்பெற்ற முக்கிய சட்ட விரோத செயற்பாடுகளை முன்னிட்டு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தட்டார்தெரு சந்தி பகுதி வாள்வெட்டு, கொக்குவில இந்துக்கல்லூரி அதிபர்,ஆசிரியர் வீடுடைப்பு,கொக்குவில் பகுதியில் பல்சர் ரக மோட்டார் சைக்கிள் அபகரிப்பு,கந்தர்மடம்,அரியாலை பகுதி வீடுடைப்பு,சிங்கள சுற்றுலா பயணிகள் பஸ் உடைப்பு .நாயன்மார் கட்டு வீடுடைப்பு,மோட்டார் சைக்கிள் அபகரிப்பு ஆகிய செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்பு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தற்போது கைது செய்யப்பட்ட இக்குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.