கஞ்சாவுடன் மூவர் கைது

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்; இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, மீராகேணிக் கிராமத்திலுள்ள இரண்டு வீடுகளில் மறைந்திருந்த 32 வயதுடைய ஒருவர் 3,000 மில்லிகிராம் கஞ்சாவுடனும் 40 வயதுடைய ஒருவர் 3,100 மில்லிகிராம் கஞ்சாவுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மிச்நகர் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 2,220 மில்லிகிராம் கஞ்சாவுடன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.