கடமை பொறுப்பேற்றார் புதிய ஜனாதிபதி

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ.ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, திறைசேரியின் செயலாளராக எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருக்கான நியமனக் கடிதங்களையும், ஜனாதிபதி கையளித்தார்.

பி.ப 12.12

நாட்டின் சுபீட்சத்துக்காக, நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தப் பின்வாங்கப் போவதில்லை. ​என்னுடைய கொள்ளைப் பிரகடணங்களின் பிரகாரம் செயற்பட்டு, புதிய அரசாங்கமொன்றை உருவாக்குவேன்.

நான் என்னுடைய நாட்டின் மீது பற்று வைத்திருக்கிறேன். என்னுடைய நாடு குறித்து நான் பெருமையடைகிறேன். என்னுடைய நாடு பற்றிய நோக்கு எனக்கிருக்கிறது. எதிர்காலச் சந்ததியினருக்காக, சௌபாக்கிய​மானதொரு நாட்டைக் ​கட்டியெழுப்ப, இலங்கையர்களான அனைவரும் என்னோடு கைகோருங்கள்.