கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு கோரிக்கை

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். அதன்போது, சட்டமா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை அழைக்குமாறு சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.