கட்சி தலைவர்களுடன் போராட்டக்காரர்கள் சந்திப்பு

காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை அங்கத்துவப்படுத்தி 25 பேர் பங்கேற்கவுள்ளனர். பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின் போது, எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.