கனடா வருபவர்கள் கரோனா இல்லை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ரஷ்யா எனப் பல நாடுகளும் மருத்துவ அவசரப் பயன்பாடு அடிப்படையில் கரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக் கொண்டுவந்துள்ளன.

கனடாவில், பைசர் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.