கனடிய பிரதமரின் இன்றைய அறிவித்தல்

2. விமான நிறுவனங்கள் வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி உள்ள பயணிகளை விமானத்தில் ஏறும் முன்பாக பரிசோதித்துத் தடுக்கவேண்டும்.

3. Toronto Pearson Airport, Montreal Pierre Trudeau Airport, Vancouver International Airport, Calgary International Airport – இந்த 4 விமான நிலையங்களூடாகவே சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்படும்.

4. U.S., Mexico, Caribbean, Saint Pierre, Miquelon உள்ளடங்கலான வர்த்தக, வணிக விமானங்களுக்குத் தடை இல்லை.

5. பொருட்களின் வழங்கலைத் தொடர்ந்து பேண, வணிக அல்லது வர்த்தகத்திற்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

6. கனடாவில் இல்லாத கனேடியர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று மீண்டும் கோரப்பட்டுள்ளது. வந்த பிறகு 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

7. தற்போது வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களை அவர்கள் நாடு திரும்ப ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட அல்லது அவர்கள் திரும்பி வரக் காத்திருக்கும் காலத்தில் அவர்களின் அடிப்படைத் தேவைகளை ஈடுகட்ட அரசு உதவும்.