கர்நாடகா – ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணின் எதிரில்

ஆனால் இந்த இயக்கங்களின் தலைவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இப்படி வீதியில் இறங்கி காட்டுமிராண்டிகள் போல் நடந்துகொள்வதில்லை. வெளிநாடுகளில்,புகழ்பெற்ற கல்லூரிகளில் படிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.பாஜக ஆட்சிசெய்கிற மாநிலங்களில் மட்டுமே இந்த காட்டுமிராண்டி அரசியல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

தமிழகம்,கேரளா,ஆந்திரா,பஞ்சாப்,மகாராஷ்டிரா,சத்தீஷ்கர்,மே.வங்கம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இப்படி மாணவர்கள் மதவெறிபிடித்து அலைவதில்லை. பாஜக இதை திட்டமிட்டு தூண்டுகிறது.பாஜக/ ஆர்எஸ்எஸ் தமிழகத்திற்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கே விரோதமானது. நாம் அவர்களை அச்சமற்று ,நேர்நின்று எதிர்ப்பதன மூலமே நமது பிள்ளைகளையும்,நமது தேசத்தையும் காப்பாற்ற முடியும். தேச விரோத ஆர்எஸ்எஸ்/பாஜகவை எதிர்ப்பதே உண்மையான தேசப்பற்று.