காரைதீவில் கொரோனா; 105 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்

காரைதீவில் முதற்தடவையாக மாணவர்கள் இருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அவர்களோடு தொடர்பிலிருந்த மூன்று வகுப்புகளில் கற்கும் 105 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.